Total Pageviews

Wednesday, February 2, 2011

மனத்துக்கண் மாசிலனாதல்-ஜென்கதை


இரு துறவிகள் ஒரு ஆற்றைக் கடப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.  ஒருஇளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்த பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண்,  நன்றி செலுத்திவிட்டுச் சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரு துறவி கேட்டார்: “நம் ஆஸ்ரமக்கோட்பாடுகளின் படி நாம் எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? பின்பு ஏன் அந்த பெண்ணை கொண்டு வந்து கரையில் விட்டீர்? “.
இரண்டாம் துறவி சொன்னார்: ”நான் அப்பெண்ணை கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீ தான் இன்னும் இறக்காமல் சுமந்து கொண்டிருக்கிறாய்” 




"மனத்துக்கண் மாசிலனாதல்"

No comments:

Post a Comment