Total Pageviews

Thursday, February 3, 2011

மீண்ட சொர்க்கம்- மன நலம்






நட்பிலும், உறவிலும் தொழில் தொடர்புகளிலும் அன்பாய், பாசமாய் உயிருக்குயிராய்ப் பழகிவிட்டு, திடீரென்று விலகிப் போய்விடுகிறவர்கள் உண்டு.  
புது உறவுகளும்,தொடர்புகளும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியிலோ, அல்லது வாழ்வின் தேவை அல்லது காலத்தின் கட்டாயத்தாலோ, இவர்களைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, இவர்களைத் தேடிக் கொள்வதோ இல்லை. அந்த அளவிற்கு நாம் யந்திரர்களாக ஆகிப்போனோம். பழைய நண்பர்களோ, ‘நிம்மதி’ என்று எண்ணும் தந்திரர்களாகவும் ஆகிப்போனார்கள். இவர்கள் மீது சற்றே கவனம் செலுத்தினால் இழந்த நட்பை, உறவை மீண்டும் பெறலாமே!
இவர்களுக்கு நம்மீது என்ன வருத்தம்? நம்மைப் பொறுத்தவரை ஏன் இப்படி பாசமாய் இருந்து பின்பு மாறிப் போனார்கள் என்கிற கேள்விகளை எழுப்பிக் கொண்டு முகவரி, தொலைபேசி எண் பெற்றுப் பேசி நேரில் தேடிப் போய்ப் பார்த்துப் பேசினால் வலுவான காரணங்களோ, வலுவற்ற காரணங்களோ தெரிய வரும்.


நாம் அணுகிய அன்பால் நெகிழ்ந்துபோய் வலுவான காரணங்களைக் கூட மறந்துவிட முன்வருவார்கள். வலுவற்ற காரணங்கள் இருப்பின் இந்த நட்பு உறவு அந்தக் கணமே புதுப்பிக்கப்பட்டுவிடும்.
இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிறுசிறு நல் நிகழ்வுகளுக்கு இவர்களை அழைக்கலாம். இதற்கிடையில் பழங்கதைகளைப் பேச வேண்டி வரும். இது வாழ்வின் சுவையைக் கூட்டும்.
‘மீண்ட சொர்க்கம்’ என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அது வேறு ஒன்றுமில்லை. இதுதான்.


No comments:

Post a Comment