Total Pageviews

Wednesday, February 2, 2011

இயல்பு-ஜென்கதை

இரு துறவிகள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
 ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். ஒருதுறவி ,அந்தத்தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார்.
 அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.வலி தாங்காமல் துறவி கையை அசைத்தார் திரும்பவும் தேள் ஆற்றில் விழுந்தது.

மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது தேள் அவரைக் கொட்டியது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.

துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”

No comments:

Post a Comment